தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான “உருமாற்ற வகுப்பறை” ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஆரம்பம்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஆசிரியர்களுக்காக நடத்தும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் “உருமாற்ற வகுப்பறைக்கான ஆசிரியர் பயிற்சி” உரையாடல் திட்டத்தின் முதலாவது நிகழ்ச்சி 2026.10.14, 15, 16 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வு அக்டோபர் 14 ஆம் திகதி குளியாப்பிட்டிய யாக்கரவத்த ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது.
வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆசிரியர் மையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகளைப் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்காக (TOT) இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை வளவாளராக கலாநிதி ரவீந்திர ரணசிங்க மற்றும் அவரது வளவாளர் குழுவினரும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் கல்வி மற்றும் மோதல் உருமாற்றப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. சுசந்த குமார அவர்களும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

- By slwebadmin




