மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ‘சஹ-சம்வாதா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான காரியாலயத்தினால், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சஹ-சம்வாதா’ திட்டத்தின் ஆரம்ப அமர்வு, 2026 செப்டம்பர் 03 ஆம் திகதி மாத்தறை கடவத் சதர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நிலவிய மோதல் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆரம்ப அமர்வில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

9 − two =