பன்மொழி நாடக நிகழ்ச்சித் திட்டம்- ஆறித்தேறிய சமூகத்தில் நாடகப்பிரதியாக்கம்
இந்த நாடக நிகழ்ச்சித் திட்டமானது கெப்பத்திகொல்லாவை மற்றும் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு கடந்த யுத்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு அதன் ஊடாக ஆறித்தேறுதலில் புதிய அத்தியாயம் ஒன்றை வரையும் வகையில் திட்டமிடப்பட்டது. நாடகத்திற்காக ஒன்றிணைந்த குழுவானது மேற்கூறிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் நடைமுறை ரீதியாக முகம் கொடுத்தவர்கள் அல்லது அத்தகையவர்களின் அயலவர்கள்,உறவினர்கள், அல்லது அவர்களுடைய பிள்ளைகளை உள்ளடக்கியதாகும். அதன் படி இந்த நாடகப்பிரதியாக்கமானது வழமையான நடைமுறையில் நாடகக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றல்ல என்பதோடு விசேட முறைமையில் நாடகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக யதார்த்தத்தின் வழியே தேசிய ஒற்றுமை மற்றும் ஆறித்தேறிய சமூகத்தினை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு நாடகம் ஆகும்.
இந்த நாடகத்தை நெறிப்டுத்துவதற்காக 11 வதிவிட செயலமர்வுகள் கெப்பத்திகொல்லாவை, கொழும்பு, கலாவெவை மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றது. கலை மற்றும் பண்பாட்டு அலுவல்கள் மற்றும் ஊடகம் பொதுமக்கள் உறவுகள் பிரிவின் நிகழ்ச்சி திட்டத்திற்காக வளவாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட தொழினுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட வளவார்களை கொண்டு செயலமர்வுகளுக்கான வளப்பகிர்வும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய முறைமையில் உருவாக்கப்பட்ட மேடை நாடகமானது வழக்கங்களை உடைத்த மேடை நாடகம் என்பதோடு தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான கருவி என்பதுடன் அது தொடர்பான கதையாடலை கட்டியெழுப்பிய பரீட்சார்த்த முயற்ச்சி யாகவும் கருதமுடியும்.
ஆறித் தேறிய சமூகத்தை கட்டியெழுப்பும் தேசிய பணிக்கு இந்த நாடகம் தன்னுடைய பங்களிப்பை நல்கும் எங்களுடைய அலுவலகத்தின் உயரிய எதிர்பார்ப்பாகும். நாடகப் பயிற்சியில் நாடகக் கலைஞர்களை உள்ளீர்த்து உருவாக்கப்பட்ட “யக்காவெவைக்கு நந்திக்கடல்” மேடை நாடகம் 2026 ஜனவரி 23ம் திகதி அன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கெளரவ ஹர்சண நாணயக்கார அவர்கள் மற்றும் ஏனைய அமைச்சர்களின் ஆகியோரின் தலைமையிலும், வெளிநாட்டு இராஜதந்திரிகளின் பங்குபற்றுதலுடனும் அரங்கேற்றப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பல்லின மத மொழிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் மற்றும் நாடகக் கலைஞர்கள் ,சமாதானம் மற்றும் மீளிணக்க செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- By slwebadmin



