க்கு வரவேற்கிறோம்-ONUR
நீதி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் இலங்கையில் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதேவேளை மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை ஒவ்வொரு நபரும் மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஏப்ரல் 8, 2015 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, டிசம்பர் 18, 2015 திகதியிடப்பட்ட 1945/41 ஆம் எண் கொண்ட வர்த்தமானியின்படி, இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்(ONUR) நிறுவப்பட்டு, தேசிய நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திடம்(ONUR) ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 9, 2020 திகதியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானியின்படி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) நீதி அமைச்சின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது.
பணியாளர்கள் விபரங்கள் – ONUR
திருமதி. D.M.S.N. ஆரியவன்ச
திரு. J.P.N.C. ஜயகொடி
திரு. M.A.M.L. முனசிங்க
திரு. H.S. லக்மால்
திரு. T.G.S.K. குமார
D.A.D. மிதினி நவின்டியா திஸ்சநாயக்க