யாழ்.பல்கலைக்கழக அமைதி மற்றும் நல்லிணக்க நிலையத்திற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று 13.02.2025 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பல்கலைக்கழக சமூகம் எவ்வாறு பங்களிக்கிறது மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் எவ்வாறு எதிர்கால வேலைத்திட்டங்களை திட்டமிடுகிறது என்பது பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் கஜபதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.