மறுமலர்ச்சி யுகத்தின் சுதந்திரதின விழா- 2025.

 

மனிதப் பிறவியை பெற்று பிறக்கும் மனிதனுக்கு மனிதத் தன்மையை  உயர்ந்த மனிதநேயமாக வளர்த்துக்கொள்வதற்கு சுதந்திரம் இன்றி அமையாத காரணி ஆகின்றது. மானிட வரலாறு முழுதும் மனிதர்கள் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதே போன்று மானுட சமூகத்தில் வலிமையானவர்கள் மற்றவர்களை அடிபணியச் செய்து அடிமைகளாக்க எடுக்கும் முயற்சிகள் பல ரூபங்களில் வெளிவருவதும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த யதார்த்தங்களை இலங்கை சமூக வரலாறு முழுவதும் நாம் அனுபவித்தோம்.

 

இலங்கை சமூகத்திற்கு நேரடியாக ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்களில் இருந்து விடுபெற்ற சந்தோஷம் 76 வருடங்களாக கொண்டாடிய எமது  சமூகத்தில் உள்நாட்டில் ஏற்பட்ட நிலைமைகள் காரணமாக  நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரம்  அவ்வப்போது சேதமடைந்ததை 30 வருடங்களாக  வெடித்த பயங்கரமான போர் உட்பட கிளர்ச்சி மற்றும் கலவரங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த பாரதூரமான நிலைமைகள்  ,  மனித சுதந்திரத்தை மீறும் பின்தங்கிய மனித நடத்தையிலிருந்து நாம் ஒரு தேசமாக சுதந்திரம் பெற்று இல்லை என்று நமக்கு விளக்குகிறது. இங்கு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதிலும், தவிர்க்கக்கூடிய ஒடுக்குமுறைகள் மற்றும் அர்த்தமுள்ள சுதந்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் தனது முதன்மையான கவனத்தை செலுத்துகிறது. சரியான தருணம் நம் முன் திறக்கப்பட்டுள்ளது.

 

மனித நேயம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும், அனைவருக்கும் சமமான சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையான CLEAN SRI LANKA திட்டத்துடன் , தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயம், “WE SRI LANKANS ”  என்கின்ற தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டத்தை சமூக மட்டத்திற்கு எடுத்துச் செல்வது  இலங்கை மக்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி மனித சுதந்திரம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடிய  ஒரு சமூக சூழலை கட்டியெழுப்புவதற்காகும். இலங்கையின் மனித பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள , பாராட்ட, தாங்க  மற்றும் உயர்த்த , உண்மையான மதிப்புகள் நடப்பட வேண்டும். இந்தப் பணியை நிஜமாக்குவதற்கு 77வது சுதந்திர தின விழாவை ஒரு நல்ல சகுனமாக மாற்றுவோம்.

 

தலைவர் மற்றும் ஊழியர்கள்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க நல்லிணக்க  காரியாலயம்