தேசிய தைப் பொங்கல் விழாவிற்காக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ரயில்.

 

தேசிய தைப்பொங்கல் விழாவிற்காக தெற்கிலிருந்து வடக்கிற்கு ரயிலில் வந்த மூத்த கலைஞர்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருக்கான வரவேற்பு நிகழ்ச்சி 17.01.2025 அன்று நண்பகல் யாழ் புகையிரத நிலையத்தில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்ததுடன் பனை அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களமும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளித்தன.