கிழக்கு மாகாணத்தில் விசேட நல்லிணக்க வேலைத்திட்டம்

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்துடன் இணைந்து அடிமட்டத்தில் நல்லிணக்க பொறிமுறையை வலுப்படுத்தும் முகமாக கிராமிய, பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் நல்லிணக்க குழுக்களுள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நல்லிணக்க குழுக்களுக்கான ஆலோசனைச் சபைகளை நியமித்தல் மற்றும் குழுக்களை நியமித்தல் 2024 பெப்ரவரி 22, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மேற்படி மாவட்டங்களின் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு இணையாக நவம் நோன்மதி போயா தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 23ஆம் திகதி தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சகவாழ்வு சங்கம் என்பன இணைந்து திகவாபி விகாரையை மையப்படுத்தி ஆன்மீக பிரசங்கம் மற்றும் தானசாலை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன. மேற்படி நிகழ்வுகளுக்கு சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அந்தந்த மாவட்டங்களின் பிரதான சமயத் தலைவர்கள், கௌரவ நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களும், சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன அவர்களும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. நிஹால் ரணசிங்க அவர்கள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் திரு. சரித் மரம்பே அவர்கள், மேற்படி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திருமதி துஷாரி சூரிய ஆராச்சி அவர்கள், மாவட்டச் செயலாளர்கள், சகல பிரதேச செயலாளர்கள், பிரதேச அரசியல்வாதிகள், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சகவாழ்வுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.