மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மார்ச் 25, 2015 திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின்படி, ஏப்ரல் 8, 2015 திகதியிடப்பட்ட அமைச்சரவை முடிவின் மூலம், அதிமேதகு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) நிறுவப்பட்டது.
எங்கள் பார்வை
பன்முகத்தன்மை மதிக்கப்பட்டு கொண்டாடப்படும் அதேவேளை, பகிரப்பட்ட அடையாளத்தின் ஊடாக தனித்துவத்தை ஊக்குவிக்கும் நமது வரலாற்று பாரம்பரியத்தின் பொதுவான களஞ்சியங்களினால் அனைத்து இலங்கையினரும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்கிறார்கள்.
எங்கள் நோக்கம்
அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்ட ஆட்சி, சமூகக் கடமைகள், பரஸ்பர மரியாதை, பாகுபாடு காட்டாமை, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை என்பனவற்றை மதிக்கின்ற ஒரு சமுதாயத்தினை உருவாக்குவதற்காக பல்வேறு பங்குதாரர் முயற்சிக்கு வழிவகுத்தலும் ஊக்குவித்தலும்.