இருமொழிப் பயிற்சித் திட்டம் (சிங்களம்/தமிழ்)
இருமொழிப் பயிற்சித் திட்டம் (சிங்களம்/தமிழ்)
இலங்கை ஒரு பல்லின, பல மத, மும்மொழி பேசும் நாடு. சிங்களம், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதும் ஒன்றாக வாழ்கின்றனர். மொழி என்பது தொடர்புக்கு ஒரு பெரிய தடையாக உள்ளதுடன் இது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க வழிவகுத்தது.
எனவே, சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இருமொழிப் பயிற்சித் திட்டங்களை நடாத்த தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், அவர்களின் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும், நாட்டில் நிலையான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் வசதி ஏற்படுத்துவதாகும்