தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வானொலி ஊடகம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வானொலி ஊடகம்

 

விதவிதமான பதிவு செய்யப்பட்ட அல்லது நேரடி பரஸ்பரக் கருத்துப்பரிமாற்றக் கலந்துரையாடல்கள், பல்வேறு கலைமுறை அணுகுமுறைகளை பயன்படுத்தி நடத்தப்படும் நிகழ்ச்சிகள், மத மற்றும் கலாசார தொடர்பான நிகழ்ச்சிகள், தேசிய மற்றும் சர்வதேச தினங்கள் அல்லது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் போன்றவை, பொதுவாக தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஊடக முயற்சிகளாகக் கருதப்படுகின்றன. எனினும், இந்த பொதுவான வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துவது இனி அவசியமில்லை என நாங்கள் நம்புகிறோம். இதற்கான காரணம், இத்தகைய நிகழ்ச்சிகள் தற்போது வானொலியை மட்டுமின்றி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகத் தளங்களிலும் தொடர்ந்து தயாரிக்கப்படுவதாகும்.
ஆகையால், புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.