தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஆரோக்கியமான சமூகத்திற்கான இளைஞர்களுடன் தலையீடு” நிகழ்ச்சியின் தொடக்க விழா.

 

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஆரோக்கியமான சமூகத்திற்கான ஊடகமயமாக்கல்” எனும் இளைஞர்களுடனான செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 25.08.2025 ஆம் திகதி அனுராதபுரம் ரஜரட்ட ஒலிபரப்பு சேவை கேட்போர் கூடத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கிய ரஜரட்ட ஒலிபரப்பு சேவையின் பிரதிப் பணிப்பாளர் திரு. பிரசன்ன திசாநாயக்க தலைமையிலான உத்தியோகத்தர்களுக்களுக்கு எமது விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விருது பெற்ற சிரேஷ்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மஹிந்த சந்திரசேகர மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிராந்திய பத்திரிகையாளருமாகிய ஷெல்டன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டதுடன் மிஹிந்தலை, ரம்பேவ, தலாவ மற்றும் திரப்பனே ஆகிய பிரதேச செயலகங்களின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கெபிதிகொல்லேவ பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கயானி ஆகியோரும் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம். மேலும், மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு. ரங்க பண்டார அவர்கள் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அடுத்த சில தினங்களில் தொடர் செயலமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.