முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து பதினாறு வருடங்கள் கடந்து சென்ற நிலையில், தற்போதைய அரசாங்கத்தினால் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக வினா எழுப்புவதற்கு தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான பிரதி அமைச்சர் முனீர் முலாப்பர் உடன் இடம்பெற்ற கலந்துரையாடல்.

தற்போதைய அரசாங்கம் தேசிய ஒற்றுமையை எவ்வாறு காண்கிறது?
உண்மையாக, நாம் ஓர் அரசாங்கமாக பதவி ஏற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. முக்கியமாக இந்த ஆறு மாதகாலத்தில் பாராளுமன்ற தேர்தல், வரவு செலவு திட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க நேர்ந்தது. அதற்கிடையில் நாம் தெளிவாக கூறியதாவது இந்த நாடு முன்னேற வேண்டுமானால், பொருளாதார ரீதியாக மாத்திரம் அல்லாது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அடிப்படையில் எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கருத்து ஒரு நாடாக, வெவ்வேறு மதங்கள் மற்றும் இனங்கள் காணப்பட்டாலும் நாம் இலங்கையர்கள் என்ற எண்ணம் இல்லாது நடந்து கொண்ட மனோபாவம் தான் கடந்த காலங்களில் தொடர்ந்து காண்டோம்.

ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, வெவ்வேறு நிகழ்வுகளை பற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் பேரினவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவைகளை வெளிக்கொண்டு வரும் செயற்பாடுகளைதான் நாம் கண்டோம். சில ஊடகங்கள் தொடர்ந்து அந்நிலைமையை மோசமடைய செய்ய இடம் அளிக்கும் நிலைமையே காணப்பட்டது. அந்த பின்புலம் தான் தேசிய ஒற்றுமைக்கு விசேட அவதானம் செலுத்த வேண்டிய காரணியாக தேசிய மக்கள் சக்தி காண்கிறது. இந்த குறுகிய காலத்தில் தேசிய ஒற்றுமைக்கு பிரிதொரு செயற்றிட்டத்தை உருவாக்கி, அதற்கான திட்டத்தை வகுத்து செயற்படுவதை விட, இதற்கு முன் இருந்த பொறிமுறையின் பிரகாரம் அதை உறுதிபடுத்தி சரியான முறையில் கொண்டுசெல்வதை பற்றி நாம் அவதானித்து கொண்டு வருகிறோம். அந்த கடமையை செய்யும் நிறுவனங்கள் உள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டுக்கான காரியாலயம் அது தொடர்பான அறிவு மற்றும் புரிந்துணர்வுள்ள உண்மையாக இந் நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுடன், இதற்கு முன் கலத்தில் நின்றவர்களை நியமித்து, அவர்கள் ஊடாக விசேடமாக அந்த செயற்றிட்டங்களை செயல்படுத்தி வேலை செய்யத்தான் எத்தனிக்கின்றோம். இந்த தருணத்திலும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு தலையீடு செய்து செயற்படுகிறோம்.

தற்போதைய ஜனாதிபதிக்கு கிடைத்த வடக்கு வாக்குகள் பற்றி கவனத்தில் கொள்ளும் போது வடக்கு மக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் மீது எதிர்பார்ப்புக்கள் இருந்தன அல்லவா?
ஜனாதிபதித் தேர்தலில், எமக்கு கணிசமான அளவு வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் வெற்றி பெற முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தோழுக்கு தோல் அல்லது சில சந்தர்ப்பங்களில் எம்மை விட எதிர்கட்சியில் உள்ளவர் வாக்குகளை பெறுவதை நாம் கண்டோம். அதற்கு காரணமும் இருந்தது. தேசிய மக்கள் சக்தி தொடர்பாக பெரிய பயம் ஒன்று இருந்தது. நாம் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்றவைகள் இடம் பெறலாம் என்று சேர்பூசும் செயற்பாடு இடம்பெற்றது. மக்கள் கடந்த காலங்களோடு ஒப்பிட்டுத்தான் அச்சந்தர்ப்பங்களில் முடிவெடுத்தார்கள். ஆனால் பொதுத் தேர்தலில் மக்களுக்கு விளங்கியது எதிர்க்கட்சியின் பிரசாரம் பொய்யானது என்றும், நாமும் நிரூபித்தோம். ஏங்கள் நோக்கம் என்ன வென்று அதனூடாகத்தான் அந்த பிரதேசங்களில் மக்களுக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டு பொதுத் தேர்தலின் போது மட்டக்களப்பு தவிர்ந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பாரிய வெற்றியை பெற முடிந்தது. உண்மையில் இன்று தற்போது நாட்டு மக்களுக்கு பாரம்பரிய கட்சிகள் தொடர்பாக பாரிய கசப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அவைகளையும் அடிப்படையாக கொண்டு பாரிய வெற்றியை பெற முடிந்தது.

பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கில் இது போன்ற முடிவொன்று பெற, நீங்கள் அந்த மக்களின் அடையாளம் கண்ட விஷேட தேவையொன்று இருந்ததா?

தமிழ் மக்களின் சார்பாக பார்த்தால் நாம் அடையாளம் கண்ட ஒன்று அல்லது தமிழ் மக்களுக்கும் புரிந்த விடயம் ஒன்றுதான் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் காட்சிகள் வெகுவாக அவர்களுடன் இருப்பது தேர்தல்கள் வெற்றி வரை மாத்திரம் மற்றும் வெற்றிக்கு பிறகு அவர்களின் செயற்பாடு வேறு மற்றும் வேறு நோக்கங்களுக்காகத் தான் இந்த அரசியலை நடாத்துகிறார்கள் என்ற விடயம் ஆழமாக புரிந்து இருந்தனர்.

அடுத்த விடயம் என்னவென்றால், பல தலைவர்கள் தேர்தல் காலங்களில் கிராமத்திற்கு வருவார்கள் மற்றும் அதன்பிறகு கொழும்பை மையமாகக் கொண்டு இருந்துவிடும் நிலைமை காணப்படுகின்றது. அதுவும் ஆழமாக பாதித்திருந்தது. தொடர்ந்து அவர்களின் நடவடிக்கை தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை. அதற்கு மேலாக தேசிய மக்கள் சக்தியின் நாங்கள், அப்பகுதியிலும் எமது பகுதி மற்றும் அடிமட்டத்திற்கு சென்று மக்களை அனுகி, அவர்களுடன் பேசி எம்மை பற்றிய விசுவாசத்தை கட்டியெழுப்பும் பொறிமுறையை தயாரித்தது மற்றும் அதற்கு பிரதான காரணியாக அமைந்தது. அது மட்டுமல்ல ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்கள், பாரம்பரிய கட்சி அரசியலின் மீது ஏற்பட்ட வெறுப்பு, அரசியல் ஊழல் மற்றும் வீழ்ச்சி மக்கள் உணர தொடங்கியதும் பிரதேசங்களில் எமக்கு வாக்கு கிடைக்க ஏதுவானது.

வடக்கு தெற்கில் இருந்த பிரிவினை நீண்ட காலத்திலிருந்து நாட்டின் அபிவிருத்திக்கு தாக்கம் செய்கிறது. அது போன்ற நாட்டின் அபிவிருத்திக்கு வடக்கு பிரதேசங்களில் இயலுமைகள் உண்டு. அது போன்றவற்றை பின்தொடர்ந்து விஷேட செயற்றிட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதா?

கண்டிப்பாக எமது வரவு செலவு திட்டத்தின் மூலம் அதைப்பற்றி குறிப்பிடப்படுகின்றது. நீண்ட காலமாக அவர்களுக்கு நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பகுதி இல்லாது போய் இருந்தது. வடக்கை மையமாகக் கொண்டு, கைத்தொழில் வலயங்கள், மீனவத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு தொழிற்துறைகள் , வலுச்சக்தி போன்றவற்றை மையமாக கொண்ட செயற்றிட்டங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. அது தொர்பான பேச்சுவார்த்தை மற்றும் விடயங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. நான் நினைக்கின்றேன் நாட்டின் அபிவிருத்திக்காக பல செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தி செல்லும் நிலையே காணப்படுகின்றது. கிழக்கு இலங்கையும் இது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஆளாகி வருகின்றது. எப்படியாயினும் முழு நாட்டையும் இலக்காக கொண்ட அபிவிருத்தியே அவசியம் ஆகும். இம்முறை அரசாங்கத்தை கையிலெடுக்கும் போது இருந்தது வேறு அரசாங்கங்கள் ஏற்கும் போது இருந்த நிலைமை அல்ல. முக்கியமாக நல்லாட்சி அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு வேண்டியவாறு கடன்பெற நிலைமை காணப்பட்டது. ஆனால் நாம் அதிகாரத்தை எடுக்கும் போது எமக்கு உரிமையானது ஒப்பந்தங்களால் நிறைந்த நாடொன்று. முக்கியமான கடந்த அரசாங்கங்களுக்கு, பணத்தை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அச்சிட கூடிய நிலைமையே காணப்பட்டது. ஆனால் எமக்கு விலங்குகள் தடைகள் மத்தியில் நாம் அதிகாரத்தை பெற்றுள்ளோம். அந்த தடைகளுக்கு மத்தியிலும் நாம் இந் நாட்டை சரியான திசைக்கு செலுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகிறோம். அதனால் இந்த நாட்டின் எந்த குடிமகனுக்கும் விளங்கக்கூடாது அபிவிருத்தியை கவனத்திற்கொள்ளவில்லை என்று. தேசிய ஒற்றுமையின் போது மிகவும் முக்கியம் இந் நாட்டின் முழு மக்களுக்கும் விளங்க வேண்டும் இந்த அபிவிருத்தியினுள் தங்களுக்கும் பங்கு உண்டு என்று. அந் நிலைமையினை ஏற்படுத்தாது தேசிய ஒற்றுமையினை சரி செய்ய முடியாது.

எதிர்காலத்தில் மாகாண சபைகள் முறையை அறிமுகப்படுத்துவீர்களா?
எங்கள் கொள்கையில் குறிப்பிட்ட ஒரு விடயமாவது, நான் நினைக்கிறேன் மாகாணசபை முறைமையை விட சகல மக்களுக்கும் நியாயத்தை நிலைநாட்ட முடியும். இதை விட சிறந்த முறை ஆனால் அதை கருத்திற் கொள்ளப்படும் என்ற காரணி.

சம வாய்ப்புக்கள் என்ற இலாபம் தொடர்பாக இருக்கும் கொள்கைகள் யாது?
எமது நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை போன்றவை குவிந்திருந்தது மேல் மாகாணத்தில் ஆகும். வடக்கிற்கு மாத்திரம் அல்ல, மற்றைய மாகாணங்களும் தொழிலாளர் சமநிலை காணப்படவில்லை. நாடென்ற வகையில் முன்னேறி செல்லும் போது அதைப்பற்றி கவனத்திற் கொண்டு ஜனாதிபதி குறிப்பிட்டார், அபிவிருத்தியின் பயன்கள் முழு நாட்டிற்கும் கிடைக்கும் வகையில் முறைமை ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற விடயம் , வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சாத்திய கூறுகள் இருக்கின்றன. அவற்றை கண்டறிந்து அதன் பிரகாரம் செயற்பட்டு, முக்கியமாக மொழி முரண்பாடுகள் குறைக்க பல்வேறு செயற்றிட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. எமக்கு அதற்கு எதிர்காலத்தில் கஷ்டப்;பட்டு உழைக்க நேரிடும்.

கல்வியில் நல்லிணக்கம் தொடர்பாக விடய சிபாரிசுகளை கொண்டு வர யோசனை உண்டா?
புதிய கல்வி முறைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். அந்த கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் உரிய இடம் மற்றும் உரிய மரியாதை கிடைக்கும் கல்வி முறையையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் குடியமர்த்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் செயற்திட்டங்கள் என்ன?
நான் நம்புகின்றேன் எந்தவொரு தரப்பினருக்கும் அநியாயம் ஒன்று நேர்ந்திருந்தால் அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பாவது அது தொடர்பாக அந்த கோரிக்கையை கவனத்திற் கொண்டு நியாயமான முறையில் செயல்படுவது ஆகும். தேசிய மக்கள் சக்தியினால் காணாமல் போனவர்கள் தொடர்பாக நஷ்ட ஈடுகள் தொடர்பான காரியாலயத்தின் ஊடாக அவர்களின் கோரிக்கை தொடர்பாக கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்.

தேசிய ஒற்றுமை பற்றி மக்கள் காண வேண்டியது எவ்வாறு?
நாம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வீழ்ச்சி கண்ட நாடாகும். நாட்டை கட்டியெழுப்ப பொருளாதார ரீதியாகவும் மற்றும் கொள்கை ரீதியாகவும் முன்னேற வேண்டும். இந் நாடு இனிமேலும் இனரீதியான, மதரீதியான வன்செயலுக்கு செல்லக்கூடிய நாடல்ல. அதனால் ஊடகங்களுக்கும் முக்கிய கடமை உண்டு. இந்த நாட்டை அழிய இடம் விடாமல், இனவாதத்திற்கு இடம் விடாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை மக்களிடையே கொண்டு சென்று சமூகத்தை பீதிக்கு ஆளாக்காமல் செயற்படுங்கள். அது போன்று பிரஜைகள் என்ற அடிப்படையில் சமாதானத்தை கட்டியெழுப்புவது அனைவரதும் பொறுப்பு ஆகும். ஓர் நிறுவனத்திற்கு மாத்திரம் சமாதானத்தையும், சகவாழ்வையும் காப்பாற்ற முடியாது. அதற்கு பிரஜைகள் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதுடன், எவராவது ஆட்சியை கைப்பற்ற இனவாதத்தை, மதவாதத்தை பரப்புவார் ஆயின், அவற்றை கடுமையாக எதிர்ப்போம். இது நாம் ஒருவர் போல் ஒன்றாக செல்ல வேண்டிய பயணமாகும்.

ஒரு இளம் ஊடக குழு உறுப்பினர்

ஹன்சிகா வீரசிங்க.