யாழ்ப்பாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களுக்கு உள்ளான பொது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கான பொதுவான அணுகுமுறையைப் பெறுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (2025.02.13) மாவட்டச் செயலாளரின் உத்தியோகபூர்வ கேட்போர் கூடத்தில் பொது மக்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்றது. இதில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஜீவனும் கலந்து கொண்டார்.