சகல இனத்தவர்கள் மத்தியிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலககத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்க பொங்கல் விழா இன்று (15) முற்பகல் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம், காரைநகர் அய்யனார் கோயில் வளாகத்தில் ஆரம்பமானது.
இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, நீதி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்ஹ, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலககத்தின் தவிசாளர் சரித் மாரம்பே ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் காரைநகர் பிரதேசவாழ் மக்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Leave a Reply