தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல கலாச்சாரங்களுடன் தொடர்புடைய இந்த சிங்கள-இந்து புத்தாண்டு கொண்டாட்டம், பௌத்த மற்றும் இந்து சமூகங்களுடன் இணைந்து அனைத்து இலங்கையர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகை தாய் புத்தாண்டு, பெங்காலி புத்தாண்டு, கம்போடிய புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, மியான்மரின் திங்யான் மற்றும் இந்தியாவின் ஒரியா புத்தாண்டு போன்ற பண்டிகைகளுடன் நெருங்கிய தொடர்புடையது, மேலும் இது உள்ளூர் கலாச்சார பண்புகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்கின்றது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் இந்த ஆண்டு முதல் CLEAN SRI LANKA அரசாங்கக் கொள்கைக்கு ஏற்ப WE SRI LANKAN திட்டத்தைத் ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் சகவாழ்வு சங்கங்கள் மூலம் நிறுவப்பட்ட சிவில் பொறிமுறையின் கீழ் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் உள்ளார்ந்த அடையாளங்களை தேசிய அடையாளமாக மாற்றுவதற்கான ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் இருந்து, நாடகம், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஊடகம் போன்ற நடைமுறைகள் மூலம் பல்வேறு கலாச்சார அடையாளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய சகவாழ்வு மற்றும் அமைதியின் கருத்துகளையும் மேம்படுத்தவும், ஆற்றும் சொற்பொழிவுகளை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பரஸ்பர கலாசாரங்களை மதித்தல் மற்றும் பன்முகத்தன்மையை மதிக்கும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் தேசிய பொறுப்பிற்கு ஏற்ப, கல்வி, அபிவிருத்தி, ஆராய்ச்சி, மோதல் தீர்வு போன்ற பல்வேறு துறைகள் மூலம் அதன் பணியை அது தொடர்ந்து நிறைவேற்றும். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்ற வகையில், இலங்கையர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த புத்தாண்டு பரிசு ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூகம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அனைத்து இனங்களும் ஒரு இலங்கை தேசமாக ஒன்றிணைவதற்கும், அவர்களின் பிரிந்த, உடைந்த இதயங்களை ஆற்றுவதற்கும், அதன் மூலம் நீடித்த அமைதியை அடைவதற்கும் இந்த புத்தாண்டு பிறப்பு வழிகாட்டும். ஒரு வளமான நாட்டையும் அழகான எதிர்காலத்தையும் உருவாக்க ஒரு பாரிய திட்டத்தை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் இந்த நேரத்தில், அந்த திட்டத்திற்கு தேவையான ஆதரவையும் பலத்தையும் வழங்க முடிகின்ற, பொது மக்கள் விரும்பும் ஒரு வளமான நாடு என்ற கனவு இனி ஒரு கனவாக இல்லாமல், அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த மகிழ்ச்சியான புத்தாண்டாக அமையட்டும் என்றும் நாங்கள் வாழ்த்துகிறோம்.
தலைவர், இயக்குநர்கள் குழு மற்றும் ஊழியர்கள்.