யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாக அலுவலகத்தின் முதலாது ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்நாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.